கருணாநிதி இந்த நேரத்தை சரியாக பயன்படுத்துகிறார் .ஆட்களை வலை வீசி பிடிப்பதோடு பின்புலம் உள்ள மனிதன் என்றால் பதவியும் கொடுத்துவிடுகிறார்.மக்களுக்கு தெரிந்த நிலையில் உள்ள தலைவர்களை நீங்கள் இழப்பதால் அது அவருக்கு லாபமாகி விடுகிறது.நீங்கள் இனிமேல் ஆட்களை உருவாக்கவேண்டும்.கொடநாடு ,சிறுதாவூர் என நீங்கள் மாதக்கணக்கில் ஓய்வு எடுக்கசென்று விடுவதால் கட்சி தூங்கிவிடாதா?அந்த நேரத்தில் யார் பொறுப்பில் கட்சி நடக்கிறது?என்ன முடிவு எடுக்கிறார்கள்?அங்கே இருந்து கொண்டு ஒவ்வொருநாளும் போராட்டத்திற்கான அறிக்கை விட்டு அவர்களும் கடனுக்கு நடத்தினால் மக்களிடம் என்ன பெயர் வாங்கமுடியும்? சிறு தலைவர்களையும் தொண்டர்களையும் அடிக்கடி சந்திக்கவேண்டும் .ஊரின் நிலைமை பிரச்சினை போன்றவவர்ரை விசாரிக்கவேண்டும் ஆளுங்கட்சி செய்யும் நியாயமற்ற செயல்களை கூட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தவேண்டும் தலை சிறந்த பேச்சாளர்களை உருவாக்கி ஊர்தோறும் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் நீங்கள் தூரமாக இருக்கிறிர்கள் என்ற எண்ணம் மாறவேண்டும் .எப்பொழுதும் உங்களை சந்திக்க முடிதல் நலமே. இதெல்லாம் கவனத்தில் ஈற்று ஆலோசனையாக கொண்டு செயல் படுவது தொண்டர் களுக்கு நல்ல மகிழ்ச்சி தரும். செய்வீர்களா?
Sunday, June 6, 2010
ஜெயலலிதா கவனத்திற்கு
அதிமுகவுக்கு இது சோதனைக்காலம் ஜெயலலிதா மிக ஜாக்கிரதையாக கட்சியை நடத்த வேண்டும் முத்துசாமியும் சின்னசாமியும் போவதால் ஒன்றும் கெடாது என்றாலும் இப்படியே போனால் என்ன செய்வது?தொண்டர்களோடு நல்ல நெருக்கம் வேண்டும் இரண்டாம் மட்ட தலைவர்கள் உருவாக்கப்படவேண்டும் தாலுக்கா தோறும் உருவாக்கப்படவேண்டும் வாரம் தோறும் அங்கே செயர்க்ழு கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் மக்களுக்கு தேவையான முடிவுகள் ,அவர்களின் பிரச்னைகள் உடனடிதேவைகள் போன்றவை விவாதிக்கப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டு அவை தீர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஒவ்வரு ஊரிலும் இப்போது ஆர்ப்பாட்டம் நடக்கிறது இதனால் என்ன பயன்?அந்தப்பிரச்சினை தீர்க்கப்படுகிறதா?அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது?பிரச்சினை தொடர்கிறத?அல்லது தீர்ந்ததா?
Subscribe to:
Post Comments (Atom)
அமெரிக்கர் கள்ஒழுக்கமான போக்குவரத்தை கையாள்வதில் சிறப்பானவர்கள் .நமது ஊரின் நிலையை நினைத்ததால் எனக்கு வருத்தமாக இருக்கிறது.சட்டம் சட்டமாக இருக்கிறது
ReplyDeleteஅருமையான கருத்து நண்பரே........தொடர்ந்து எழுதுங்கள்................
ReplyDelete